விவசாயி
தலைமையிடத்தில் நிர்வாணமாய்
ஊர்வலம்.
உரிமைக்குரல் கொடுக்க நாதியில்லாத
அனாதையாய்த் திரிகின்றோம்.
சோற்றில் கரத்தினைப் பதிக்கும்
பணமுதலைகளே !
விவசாயம் வீழ்ந்தால் எதை உண்பீ்ர்கள் ?
வெற்றுக்காகிதமாய்க் காட்சியளிக்கும்
பணத்தையோ?
நெகிழி பிளாட்டினம் போன்ற அரிசியை
உணவுக்குழலும் செரிமான உறுப்புகளும்
தீண்டாத பொருளையோ உண்பீர்கள்?
விதை விதைத்தவன் விவசாயி
விலை வைத்தவன் வியாபாரி
ஏமாற்றி திண்பவன் அரசியல்வாதி.
உழவனின் முதலீடு உழைப்பு மட்டுமே,
அறுவடைச் செய்யும் இலாபக் கணக்கோ
தற்கொலை.
உலகத்தினையே
சுமக்கின்றோம்
அரைவயிற்றுக்
கஞ்சிக்காகக்
கழனிச்சேற்றில்
அரைநிர்வாணமாய்.
