கல்லூரி வானில்
கனிந்த மலா்களாய்
கண்ணிமைத் தூரத்தில்
தகவல்துறையும் காதல்துறையும்
சங்கமித்தன.
விழிகளின் ஈர்ப்பினால்
விரைவில் பயணிப்போம்
செயற்கைக்கோளாய்.
ஆண்டவனாய்
அவதாரமெடுப்போம்.
ஆதியும் அந்தமும்
உலகை ஆள்வதற்கு.
பதிப்பிக்கும் புதியதான
மாற்றங்களினால்,
சுழன்றடிக்கும் சுனாமியும்
சுருக்கம் கொள்ளும்.
ஒசோனும் ஒளிர்விடும்
பூவுலகை வெல்வதற்கு
இயற்கையும் இரங்கும்
ஏழைகளும் எழுச்சி கொள்வர்.
எங்களின் ஏற்றங்களைக் கண்டு.
புரியவைப்போம்
அறிவியல் அறிவு
அடிமைப்படுத்தல்ல
ஆக்கத்திற்கே !
போரில்லா உலகம்
படைப்போம்,
பிளக்கும் புவியை
பிணைக்கச் செய்வோம்.
குண்டு மழை
பொழிய வாய்பில்லாததால்
உறக்கம் கொள்வோம்
நிம்மதியாக.
இளைய தலைமுறைகளை
உருவாக்குவோம்,
சிறார்களும்
சிறகடித்துப் பறப்பர்
சாதனைக்களஞ்சியங்களாய்…
உரிமைக் கொடுப்போம்
முன்னோர்களுக்கு
அகற்றுவோம்
முதியோர் இல்லங்களை.
தீயினில் பொசுக்குவோம்
தீண்டாமையை,
வளம் பெறசெய்வோம்
மனிதகுலத்தை.
மதம், இனத்தின்
மாயையை அகற்றி
சமத்துவ தீபத்தை
எந்நாளும் ஏற்றுவோம்.