புதன், 29 ஜூலை, 2015



இந்திய தாய்
வரமாய் பெற்ற 
தவப்புதல்வர்
அப்துல் கலாம்.

இளைஞர்களின்
இதய துடிப்பாய்
உயிர்த்தெழுந்தார்
இராமேஸ்வரத்தில்.

வறுமையில்
வாடிய நிலையில்
தன் தாயின்
கனவை உயர்வாக்க
வல்லரசு மந்திரம்
விதைத்த விஞ்ஞானி.

வளரும் இளம்
தலைமுறையினருக்கு
முன்னோடி……….

மழலையின் சிரிப்பில்
மகிழ்ச்சி மழையில்
நனைந்தவர்.. …. ……….

கனவின் பதத்திற்கு
பாதை வகுத்த
மகான்………………..
 
தம் வாழ்வின்
அகராதியில்
இளைஞர்களுக்கு
விஞ்ஞான ஊக்கம் ஊட்டியவர்.

அன்பிற்கு ஆக்கமாய்
கலாம் வாழ்க்கையே
அர்பணித்தவர்.

அக்னி சிறகுகளில்
ஆழங்காற் சிந்தனைகளை
பாமரனுக்கு பரிசளித்தவர்.

விண்ணில்
ஏவுகணை ஏவினார்
2020 –இல்
இந்தியா வல்லரசு.
இளைஞர்களுக்கு
இலட்சிய கனவை ஏவினார்.

இளைஞர்களே
எனக்கு
நிரந்தர உறக்கம்
அளித்துவிடாதீர்கள். 

இளைஞர்களே !!!
நான்
உங்கள் கனவில் 
உங்கள் கடமையில்
உங்கள் இதயத்தில்
உங்கள் இலட்சியத்தில்
உங்கள் சிரிப்பில்
உங்கள் எண்ணத்தில்
உங்கள் அறிவில்
உங்கள் ஆற்றலில்
உங்கள் விவேகத்தில்
உங்கள் அன்பில்
ஆனந்தாமய்
உருவெடுத்திருக்கின்றேன்.
கனவை நனவாக்குங்கள்.

  ------------------














இலட்சியம்



இளைஞர்களே !!!
நான்
உங்கள் கனவில் 
உங்கள் கடமையில்
உங்கள் இதயத்தில்
உங்கள் இலட்சியத்தில்
உங்கள் சிரிப்பில்
உங்கள் எண்ணத்தில்
உங்கள் அறிவில்
உங்கள் ஆற்றலில்
உங்கள் விவேகத்தில்
உங்கள் அன்பில்
ஆனந்தாமய்
உருவெடுத்திருக்கின்றேன்.
கனவை நனவாக்குங்கள்.

 

வெள்ளி, 27 மார்ச், 2015


வேட்கை

கண்களினால்
சிறைபடுத்தினால்
உள்ளத்தின்
தூண்டலை.

உதடுகளால்
துலங்கல்
துலங்கத் தயங்கினாள்
நாணத்தின்
காரணமாக.

அழகு

காதலிக்கு
உலகம் போற்றும் 
தாஜ்மஹால்

கல்லூரி 
காதலனுக்கு
காதலியே ….

உலகில்
அதிசயம்
எண்களில்…

கணக்கிலடங்கா
அதிசயம்
கண்முன்னே!

கண்கள்
அசைவுகள்
தேடல்.

கல்லூரிச்
சாலைகள் 
காலம்தோறும்
உருமாற்றம் 
காதலர்களால்.

வசந்த காலத்தின்
வருகையை 
வெளிப்படுத்த 
குயிலின்
கானம்.

காதலியின் 
வரவை
உணர்த்த
தோழியின் 
கூப்பாடு.

மாற்றங்கள்
தோன்றும்
வாழ்க்கையில்
மாறாத நிகழ்வு
எண்ணங்கள்.

உள்ளம்
நினைவகக்கூட்டில்
வண்ணத்துப்பூச்சியாய்
வானுலகில்
வலம்.

ஏதிர்பாராதக்
காட்சி
பேருந்தில்
தரிசனம்
விழிகளில்.

உணர்வுகளில்
உத்வேகம்
மறுநாள்
நெருங்கிய
உரசல்.

மெல்லிய
சப்தம்
ஏழு
சுரங்கள்
செயலிழக்கும்.

உறவு
உரவுக்கு
தேர்வு
ஏமாற்றம்

முப்புறங்களில்
பேருந்து 
சாலைகள்
நடுவில்
நான்.

கதிரவன்
கத்தரி 
மலர்கனைகளைத்
தொடுத்துக் 
கொண்டிருந்தான்.

என்னை
நோக்கிய
ஓர்
இன்பப்புயல்
நெருங்கிக் கொண்டிருந்தது.

புயலுக்குப்
பெயர்
அறியேன்.

நாள்தோறும்
காத்திருப்பு
முப்புறத்தின் 
மையத்தில்.




சனி, 14 மார்ச், 2015

எதிர்காலம்




கல்லூரி வானில்
கனிந்த மலா்களாய்
கண்ணிமைத் தூரத்தில்
தகவல்துறையும் காதல்துறையும்
சங்கமித்தன.

விழிகளின் ஈர்ப்பினால்
விரைவில் பயணிப்போம்
செயற்கைக்கோளாய்.

ஆண்டவனாய் 
அவதாரமெடுப்போம்.
ஆதியும் அந்தமும்
உலகை ஆள்வதற்கு.

பதிப்பிக்கும் புதியதான
மாற்றங்களினால்,
சுழன்றடிக்கும் சுனாமியும்
சுருக்கம் கொள்ளும்.

ஒசோனும் ஒளிர்விடும்
பூவுலகை வெல்வதற்கு
இயற்கையும் இரங்கும்
ஏழைகளும் எழுச்சி கொள்வர்.
எங்களின் ஏற்றங்களைக் கண்டு.

புரியவைப்போம்
அறிவியல் அறிவு
அடிமைப்படுத்தல்ல
ஆக்கத்திற்கே !

போரில்லா உலகம்
படைப்போம்,
பிளக்கும் புவியை
பிணைக்கச் செய்வோம்.

குண்டு மழை
பொழிய வாய்பில்லாததால்
உறக்கம் கொள்வோம்
நிம்மதியாக.

இளைய தலைமுறைகளை
உருவாக்குவோம்,
சிறார்களும் 
சிறகடித்துப் பறப்பர்
சாதனைக்களஞ்சியங்களாய்…

உரிமைக் கொடுப்போம்
முன்னோர்களுக்கு
அகற்றுவோம் 
முதியோர் இல்லங்களை.

தீயினில் பொசுக்குவோம்
தீண்டாமையை,
வளம் பெறசெய்வோம்
மனிதகுலத்தை.


மதம், இனத்தின்
மாயையை அகற்றி
சமத்துவ தீபத்தை 
எந்நாளும் ஏற்றுவோம்.



வெள்ளி, 13 மார்ச், 2015

தவம்


 தவம்…

ஈர் இரண்டு விழிகள்
ஈர்த்துக் கொண்டன
விண்ணையும் மண்ணையும்
நோக்கியவாறே. 

கண்களின் தவறுகளுக்கு
மூளைக்குத் தண்டணை
அனிச்சைச் செயலாக
வலம் வந்தாள்.

அவளைத் தேடினேன்
மின்னலாய்தென்பட்டாள்.
ஞாயிறு போல
ஞாலம் தந்தாள்,

வளர்பிறையாய் 
வளர்ந்தாள்.
தேய்பிறையாய்
மறைந்தாள்.
எப்பொழுது
உதிப்பாளோ ?

எரிகற்களாய்
அவளின் நினைவுகள்,
உயிரில் 
மோதிச் செல்கின்றன.

காலம் கடந்து
செல்லுகிறது
காதலின் வேகம்  
குறையவில்லை..

அவள் வீசிய 
விழிகளின் வலையில்
மீண்டெலாதவனாக 
வலம் வருகின்றேன். .


மொழியாமல் போன 
காதலை
எந்த நிலையில் 
எடுத்துரைப்பேன்,
தவிக்கின்றேன்..

மாமலையாய் 
அவளின் பிம்பம்
மனதினுள்,

இதயத்தின் 
திறவுக்கோலுக்கு
மறுபிறவி தருவாளா ?
(மா) ரிஷி போல
காத்திருக்கின்றேன்.

மனசு


மனசுக்குள்….


இருவரின் 
விழிகள் மோதிக் கொண்டன
அண்ட சராசரங்களாய்
நொடிப் பொழுதில்
உள்ளத்தில் உதித்தாள்.

மனக்குறியீடுகளால்
தயக்கமும் குழப்பமும்
மனக்குமுறலாய்
அவளின் நினைவுகள்.

என்னவளை
இன்மையில் கண்டேன்
மறுமையில் பெற்றேன்
மறை(ர)யாய் உணர்ந்தேன்

இருண்ட இதயம் 
விண்மீன்களாய்….
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நிமிடத்திலும்.

இமைகளில் இளந்தளிராய்
இதயத்தில் இறங்கினாள்
நினைவுகளில்
புரியாத மொழியை 
புகுத்தியவாறே !

அவள்
தோழியாய்
காதலியாய்
தெரியவில்லை.

எப்பொழுது 
அரவணைப்பாளோ?
மறுப்பாளோ?
தவிக்கின்றேன்,
சாயல்களுக்காக.

பிறப்பையும் இறப்பையும்
சொர்க்கத்தையும் நரகத்தையும்
உணர்ந்தேன்,
அவளை
கண்டும் காணாத 
நிமிடங்களில்.
புவியில் புதையுண்ட
மரங்கள் 
வெளிப்படும்
வைரங்களாய் !

எந்நாட்களில் 
தீட்டப்படும்
என் காதல் 
ஓவியங்களாய் ?

தினம் தினம்
முயல்கின்றேன்
காதலை வெளிப்படுத்த
இயலவில்லை.

அவளின் 
ஒர விழிப் பார்வையால்
ஒதுக்கிவிடுவாளோ?

மனம் 
தளராமால் முயல்கின்றேன்
இதயச் சிரை(ற)யில்
சிறை பிடிக்க

திங்கள், 9 மார்ச், 2015


அற்புதம்

பாறையின் கலை வடிவத்தை
கண்களினால் குடைந்தெடுத்தாள்
ஈரப்பத்தை.

கல்லாய் இருந்த மனதை
சிற்பமாய் உரு மாற்றினாள்
உளியாய் கண்கள்.

கல்லும் பறக்கும் காற்றில்
அவள் காட்டும் நேசம்
அற்புதம் நிகழும் அறிவியல்.