மனசுக்குள்….
இருவரின்
விழிகள் மோதிக் கொண்டன
அண்ட சராசரங்களாய்
நொடிப் பொழுதில்
உள்ளத்தில் உதித்தாள்.
மனக்குறியீடுகளால்
தயக்கமும் குழப்பமும்
மனக்குமுறலாய்
அவளின் நினைவுகள்.
என்னவளை
இன்மையில் கண்டேன்
மறுமையில் பெற்றேன்
மறை(ர)யாய் உணர்ந்தேன்
இருண்ட இதயம்
விண்மீன்களாய்….
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நிமிடத்திலும்.
இமைகளில் இளந்தளிராய்
இதயத்தில் இறங்கினாள்
நினைவுகளில்
புரியாத மொழியை
புகுத்தியவாறே !
அவள்
தோழியாய்
காதலியாய்
தெரியவில்லை.
எப்பொழுது
அரவணைப்பாளோ?
மறுப்பாளோ?
தவிக்கின்றேன்,
சாயல்களுக்காக.
பிறப்பையும் இறப்பையும்
சொர்க்கத்தையும் நரகத்தையும்
உணர்ந்தேன்,
அவளை
கண்டும் காணாத
நிமிடங்களில்.
புவியில் புதையுண்ட
மரங்கள்
வெளிப்படும்
வைரங்களாய் !
எந்நாட்களில்
தீட்டப்படும்
என் காதல்
ஓவியங்களாய் ?
தினம் தினம்
முயல்கின்றேன்
காதலை வெளிப்படுத்த
இயலவில்லை.
அவளின்
ஒர விழிப் பார்வையால்
ஒதுக்கிவிடுவாளோ?
மனம்
தளராமால் முயல்கின்றேன்
இதயச் சிரை(ற)யில்
சிறை பிடிக்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக