தவம்…
ஈர் இரண்டு விழிகள்
ஈர்த்துக் கொண்டன
விண்ணையும் மண்ணையும்
நோக்கியவாறே.
கண்களின் தவறுகளுக்கு
மூளைக்குத் தண்டணை
அனிச்சைச் செயலாக
வலம் வந்தாள்.
அவளைத் தேடினேன்
மின்னலாய்தென்பட்டாள்.
ஞாயிறு போல
ஞாலம் தந்தாள்,
வளர்பிறையாய்
வளர்ந்தாள்.
தேய்பிறையாய்
மறைந்தாள்.
எப்பொழுது
உதிப்பாளோ ?
எரிகற்களாய்
அவளின் நினைவுகள்,
உயிரில்
மோதிச் செல்கின்றன.
காலம் கடந்து
செல்லுகிறது
காதலின் வேகம்
குறையவில்லை..
அவள் வீசிய
விழிகளின் வலையில்
மீண்டெலாதவனாக
வலம் வருகின்றேன். .
மொழியாமல் போன
காதலை
எந்த நிலையில்
எடுத்துரைப்பேன்,
தவிக்கின்றேன்..
மாமலையாய்
அவளின் பிம்பம்
மனதினுள்,
இதயத்தின்
திறவுக்கோலுக்கு
மறுபிறவி தருவாளா ?
(மா) ரிஷி போல
காத்திருக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக